விருதுநகர் அருகே மதுபான லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

மதுபாட்டில்களைப் பொதுமக்கள் யாரும் எடுத்துச் செல்லாமல் இருக்க போலாரோ ரோந்து போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மதுபாட்டில்களை பொதுமக்கள் எடுத்துச் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
லாரி கவிழ்ந்து விபத்து
Published on

விருதுநகர்,

சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

லாரி கவிழ்ந்து விபத்து

சென்னையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நெல்லை நோக்கிப் புறப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) லாரி விருதுநகர் எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைப் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலேயே தலைகீழாகக் கவிழ்ந்தது.

ஓட்டுநர் உயிர் தப்பினார்

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி மற்றும் சரக்கு ஏற்றிச் சென்ற பகுதி பலத்த சேதமடைந்தது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

லாரி கவிழ்ந்ததில் சில மதுபாட்டில்கள் உடைந்த சிதறிய நிலையில், எஞ்சிய மதுபாட்டில்களைப் பொதுமக்கள் யாரும் எடுத்துச் செல்லாமல் இருக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலாரோ ரோந்து போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துக்குள்ளான லாரியை மீட்டெடுத்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com