ஸ்கூட்டர் மீது லாரி மோதி வாலிபர் பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்.
ஸ்கூட்டர் மீது லாரி மோதி வாலிபர் பலி
Published on

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்த சேகரின் மகன் சூர்யா(வயது 25). இவர் நேற்று முசிறியில் பொருட்களை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாத்தலை அருகே ஸ்கூட்டர் வந்தபோது எதிரே அரியலூரில் இருந்து கேரளாவிற்கு சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சூர்யா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com