செங்குன்றம் அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

செங்குன்றம் அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது
Published on

செங்குன்றம்,

சென்னை அம்பத்தூரில் இருந்து இரும்பு துகள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் வடகரை சந்திப்பு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. அதில் இருந்த இரும்பு துகள்கள் சாலை முழுவதும் சிதறின.

இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபி தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் விழுந்து கிடந்த லாரி மற்றும் இரும்பு துகள்களை சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com