வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல, கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் (29-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தமிழகத்தில் வருகிற 3-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com