சென்னை அம்பத்தூர் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சென்னை அம்பத்தூர் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் இருந்து முகப்பேறு நோக்கி சொகுசு காரில் சென்று கொண்டிருந்த நபர், அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சிக்னல் அருகே காரை நிறுத்திவிட்டு, டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story