இரவு நேரத்தில் அரசு அலுவலகத்திற்குள் இருந்த ஆண், பெண் - சேலம் அருகே பரபரப்பு

சேலம் அருகே இரவு நேரத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆண், பெண் என இருவர் தங்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

சேலம்,

சேலம் அருகே இரவு நேரத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆண், பெண் என இருவர் தங்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருவர் தங்கியிருந்த நிலையில், சந்தேகமடைந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கு தங்கியிருந்தவர்களை விசாரித்தனர்.

அதில், மேட்டூரை சேர்ந்த தங்கராஜ், லட்சுமி என்ற இருவரும் கூலித் தொழில் செய்வதற்காக வந்ததாகவும், ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் பழனிச்சாமி அங்கு தங்க வைத்ததாகவும் கூறினர். இதனிடையே சம்பவம் அறிந்து வந்த போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்ட முயன்றபோது, அங்குவந்த ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் பழனிச்சாமி, ஆவணங்களை கொளுத்திவிட்டு இளைஞர்கள்தான் கொளுத்தியதாக புகார் தெரிவிப்பேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அரசு ஆவணங்கள் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்தில் இருவர் தங்க வைக்கப்பட்டதும், ஓய்வுபெற்ற உதவியாளரிடம் கிராம நிர்வாக அலுவலர் சாவி எப்படி வந்தது? என்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com