எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்; விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்


எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்; விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
x
தினத்தந்தி 25 Aug 2025 2:25 PM IST (Updated: 25 Aug 2025 2:32 PM IST)
t-max-icont-min-icon

உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை விஜயகாந்த் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் மற்றும் நடிகரான விஜயகாந்தின் 73-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரது இனிய நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை, எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்,

தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர், மறைந்த அன்பு சகோதரர் கேப்டன் @iVijayakant அவர்களின் பிறந்த நாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

1 More update

Next Story