ஆடு திருட முயன்றவர் கைது

ஆடு திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆடு திருட முயன்றவர் கைது
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் கெங்காதரன்(வயது 75). இவர் 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் கத்தியதால், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஒருவர் ஆட்டை தூக்கி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கெங்காதரன் சத்தம் போட்டதால், அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் ஆட்டை திருட முயன்றவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் மணிகண்டன்(22) என்பது தெரியவந்தது. இதற்கிடையே அவரை பிடித்தபோது நழுவிய ஆடு கீழே விழுந்து தப்பி ஓடியது. அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் ஆட்டை கடித்ததில், ஆடு பரிதாபமாக செத்தது. இது பற்றி தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் அங்கு வந்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com