ஆடு திருட முயன்றவர் கைது

தூத்துக்குடியில் ஆடு திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆடு திருட முயன்றவர் கைது
Published on

தூத்துக்குடி மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாகர் (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் மடத்தூர் சாய் பாபா கோவில் அருகே நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்த ஆட்டை திருட முயற்சித்தார். உடனே, சுபாகர் மற்றும் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த திருமணி (43) என்பதும், சமையல் வேலை செய்து வரும், அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருட முயற்சித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com