கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த ஆண் உடல்

கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த ஆண் உடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த ஆண் உடல்
Published on

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரைப்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார் உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com