அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம்

அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம் நடைபெற்றது
அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம்
Published on

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற தொழில் முறை செவிலியர் முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயக செவிலியர் சங்க நிர்வாகிகளின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் திலகவதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சென்னையில் நடைபெற உள்ள அமைதிப் பேரணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com