ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கூட்டம்

ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கூட்டம்
Published on

கரூர் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 70 வயதான ஓய்வு பெற்ற காவலர்களுக்கு 10 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 1971-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு முன்னுரிமை படி பதவி உயர்வு வழங்க வண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com