மாதவரம் நெடுஞ்சாலைக்கு வந்தது சுரங்கம் தோண்டும் எந்திரம்

மாதவரம் நெடுஞ்சாலைக்கு வந்தது சுரங்கம் தோண்டும் எந்திரம்
Published on

சென்னை,

மாதவரம் பால் பண்ணை முதல் மாதவரம் நெடுஞ்சாலை வரை மெட்ரோ ரெயில் சேவைக்காக சுரங்கம் தோண்டும் பணியில் 2 எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதில் 1.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட முதலாவது எந்திரமான 'நீலகிரி', யின் (எஸ்-96) பணியை கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதவரத்தில் நேரடியாக சென்று தொடங்கிவைத்தார்.

கடந்த 10 மாதமாக பணியில் ஈடுபட்டிருந்த இந்த எந்திரம், நேற்று சுரங்கப்பணியை நிறைவு செய்துவிட்டு மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, டாடா திட்டத்தின் நிறுவனத்தின் துணைத்தலைவர் ராமன் கபில் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து இதேபாதையில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் 2-வது எந்திரமான 'பொதிகை', மொத்த நீளம் 1.4 கிலோ மீட்டரில் சுமார் 800 மீட்டர் நீளத்தையும் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில், தலைமை பொதுமேலாளர்கள் எஸ்.அசோக் குமார், லிவிங்ஸ்டோன், ஜே.கிருஷ்ணமூர்த்தி, டி.குருநாத் ரெட்டி, இணை பொதுமேலாளர் ரீபு தமன் துபே, இயக்குனர் ரங்கநாதன், மேலாளர் ரமேஷ், பொது ஆலோசகர் குழுத் தலைவர் டோனி புர்செல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com