குண்டும்- குழியுமான சாலையில் பரிதாப பயணம்

செருகுடி- திருப்பாம்புரம் இடையே குண்டும்- குழியுமான சாலையில் மக்கள் பரிதாப பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும்- குழியுமான சாலையில் பரிதாப பயணம்
Published on

குடவாசல்;

செருகுடி- திருப்பாம்புரம் இடையே குண்டும்- குழியுமான சாலையில் மக்கள் பரிதாப பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்துள்ள சாலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செருகுடியில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் சாலை மிகவும் முக்கியமான சாலை ஆகும். ஆலத்தூர், சுரைக்காயூர், கிள்ளியூர் திருப்பாம்புரம் திருவீழிமிழலை, விளக்கம், அன்னியூர் உள்ளிட்ட பல கிராம பொதுமக்கள் குடவாசலில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று வரவும், மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்லவும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்லவும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் தினமும் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக செருகுடி- திருப்பாம்புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com