காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி! - நயினார் நாகேந்திரன்

காவல் உதவி ஆய்வாளரை, திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி! - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பாதுகாப்பு இல்லை

சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்ததற்காக, காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கத்தை, திமுக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து கொடூரமாகத் தாக்கி அவரது கையை உடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

காவல் நிலையத்திலேயே காவல்துறைக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த அவல நிலையே, தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்குச் சான்றாகும்.

தகுந்த நடவடிக்கை வேண்டும்

எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதோடு, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் இருக்க முதல்-அமைச்சர் விஜய் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com