ரூ.2½ கோடியில் ஜாபர்கான் பேட்டையில் நவீன மயான பூமி

ரூ.2½ கோடியில் ஜாபர்கான் பேட்டையில் நவீன மயான பூமி கட்டுவதற்கு மேயர் பிரியா அடிக்கல் நாட்டினார்.
ரூ.2½ கோடியில் ஜாபர்கான் பேட்டையில் நவீன மயான பூமி
Published on

சிங்கார சென்னை 2.0 நிதி திட்டத்தின் கீழ், கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான் பேட்டையில் பழைய பழுதடைந்த மயான பூமி கட்டிடத்தை இடித்து புதிதாக 2 தகன மேடை கொண்ட நவீன மயான பூமி கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. அந்த வகையில், ஜாபர்கான் பேட்டையில், டுபிட்கோ நிதியில் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் நவீன மயானபூமி கட்டுமான பணிகளை, மேயர் பிரியா நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ் குமார், மத்திய வட்டார துணை கமிஷனர் ஷேக் அப்துல் ரகுமான், மண்டல தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com