ரூ.2½ கோடியில் நவீன மீன் அங்காடி

விழுப்புரத்தில் ரூ.2½ கோடியில் நவீன மீன் அங்காடி அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
ரூ.2½ கோடியில் நவீன மீன் அங்காடி
Published on

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட அனிச்சம்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு மீன் அங்காடியை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பேசினார்.

தொடர்ந்து விழுப்புரம் நேருஜி சாலையில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்க திட்டத்தின்கீழ் ரூ.1.20 கோடி மதிப்பில் புதியதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி மதிப்பில் பூங்கா மேம்படுத்தும் பணி ஆகியவற்றை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பெருந்திட்ட வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகரமன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளர்(பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com