

சென்னை:
தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகங்களைத் தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கும் மாதம் ரூ.1,000 பராமரிப்பு நிதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 12,646 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களின் உள்கட்டமைப்பு மற்றும் அன்றாடப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் மொத்தம் ரூ.15.18 கோடி செலவிடப்பட உள்ளது.
இந்த நிதியைக் கொண்டு அலுவலகங்களைத் தூய்மையாகப் பராமரிக்கத் தேவையான துடைப்பம், பினாயில் உள்ளிட்ட தூய்மைப் பொருட்களையும், அலுவலகப் பயன்பாட்டிற்குத் தேவையான எழுதுபொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம்.
இதற்கிடையே, 2026-2027-ம் நிதியாண்டில் செப்டம்பர் 2026 முதல் மார்ச் 2027 வரை 7 மாதங்களுக்கு ரூ.8.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்லும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களைத் தூய்மையாகவும், சுகாதாரமான சூழலிலும் பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.