சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

வாலாஜா அருகே சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

வாலாஜா

வாலாஜாவை அடுத்த பெரிய தகரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் மாந்தாங்கலில் உள்ள தனியார் தோல்தொழிற்சாலையில் வேலைசெய்து வந்தார். கடந்த 18-ந் தேதி இரவு வாலாஜாவை அடுத்த கோவிந்தச்சேரிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவை பார்த்துவிட்டு இரவில் தனது மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

கரடிகுப்பம் கிராமத்தில்உள்ள வளைவில் வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள வீட்டுகாம்பவுண்டு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மணிகண்டன் பலத்த காயம் அடைந்து பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com