மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி

சீர்காழி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
Published on

சீர்காழி:

சீர்காழி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

நண்பர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகனி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் அன்பரசன்(வயது 23), சீர்காழி அருகே பச்சை பெருமாள்நல்லூர் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(23).

நண்பர்களான இவர்கள் நேற்று முன்தினம் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசலை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது

மோட்டார் சைக்கிளை ராஜேஷ் ஓட்டிச் சென்றார். செம்மங்குடி அருகே சென்றபோது சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராஜேஷ் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த ராஜேசை சிகிச்சைக்காகவும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ் அனுப்பி வைக்கப்ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com