நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.3¾ கோடியில் புதிய திருமண மண்டபம்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.3¾ கோடியில் புதிய திருமண மண்டபம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.3¾ கோடியில் புதிய திருமண மண்டபம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி மதிப்பீடுகள் தயார் செய்து ரூ.3 கோடி செலவில் கட்ட தஞ்சாவூர் இணை ஆணையர் மூலம் நிர்வாக அனுமதி கோரி அரசை கேட்டிருந்தனர். சட்டமன்றத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது 27 கோவில்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை ஏற்று நாத்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்ட கோவிலின் நிதி மூலம் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com