20 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து

கோவை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அசன பண்டிகையையொட்டி 20 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.
20 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து
Published on

கோவை- திருச்சி ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி எதிரே சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. இங்கு 26-வது ஆண்டு பிரதிஷ்டை விழா கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சி, சிறப்பு ஆராதனை கூட்டம் நடந்தது. நேற்று அசன பண்டிகை கொண்டாடப்பட்டது. காலை நடந்த சிறப்பு ஆராதனை கூட்டத்தில் திருச்சி பிஷப் சந்திரசேகரன் பங்கேற்று ஆராதனை நடத்தினார். காலை 10.30 மணிக்கு அசன விருந்து தொடங்கியது. இதற்காக ஆலய வளாகத்தில் ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு சாதம், ஆட்டிறைச்சி குழம்பு, சாம்பார், அவியல், ரசம், பாயாசம் ஆகியவற்றுடன் விருந்து அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பிரபல சமையல் கலை வல்லுனர் கோயில் பிச்சை தலைமையில் 50 சமையல் கலைஞர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 2,500 கிலோ ஆட்டிறைச்சி பயன்படுத்தப்பட்டது. அசன விருந்து மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய தலைவர் ராஜேந்திரகுமார், செயலாளர் பாக்கிய செல்வன், பொருளாளர் காட்வின் மற்றும் போதக சேகர குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com