அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு; நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் தயார் நிலை

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் தயார் நிலையில் இருக்கிறது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு; நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் தயார் நிலை
Published on

13 மளிகை பொருட்கள்

கொரோனா நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு ஊரடங்கை ஒரு வார காலம் நீட்டித்து இருக்கிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்த அறிக்கையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என்றும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம், ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.

அரசு அறிவித்தபடி, கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம்பருப்பு, புளி, கடலைப்பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு, துணிப்பை ஆகிய 13 பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட உள்ளன.

இந்த பொருட்கள் அனைத்து நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் குடோனுக்கு தற்போது கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து பொருட்களும் ஒவ்வொரு துணிப்பையில் போடப்பட்டு, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் தெரிவித்தது போல, ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்தாலும், எந்த தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன என்ற தகவல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த பொருட்களை வழங்கும்போது, அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காலமாக இருப்பதால், அதற்கான பாதுகாப்பு உடைமைகளை வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகள் முன்பு முறையாக தடுப்பு வேலி அமைத்து, மக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பெற்றுச் செல்வதற்கும் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com