திரையுலக நட்சத்திரங்களின் அணிவகுப்பு: அவிநாசியில் எல்.முருகனுடன் முக்கிய சந்திப்பு

மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவர்களுக்காக அவிநாசியில் களமிறங்கிய பிரபல சின்னத்திரை பட்டாளம்
திரையுலக நட்சத்திரங்களின் அணிவகுப்பு: அவிநாசியில் எல்.முருகனுடன் முக்கிய சந்திப்பு
Published on

திருப்பூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவிநாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல். முருகன் அவர்களை ஆதரித்து, பிரபல சின்னத்திரை நடிகர்கள் தங்களது பிரசார பணிகளை மேற்கொண்டனர்.

அவிநாசியில் அமைந்துள்ள எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், பா.ஜ.க., கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவர் பெப்சி சிவா, திரைப்பட நடிகர்கள் ராஜ்காந்த், தேவானந்த், அம்மு, தனலட்சுமி, தீபா நேத்ரன், இந்திரன், கிர்ணமை, ஸ்நேக் ரவி, சின்னாளபட்டி சுஜி, கொட்டாச்சி உள்ளிட்ட நடிகர்கள், எல். முருகன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின் போது, கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் பிரேம் குமார், சுவாமிநாதன், ராஜேஷ், சவுத்ரி, வெங்கடேஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com