ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு

ஓடும் பஸ்சில் பயணி திடீர் என இறந்தார்.
ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு
Published on

சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 60). இவர் நேற்று பிற்பகலில் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு வந்த பஸ்சில் பயணம் செய்தார். பாளையங்கோட்டை நூலகம் அருகே தனியார் ஆஸ்பத்திரி பகுதியில் பஸ் சென்றபோது திடீரென்று சீனிவாசன் மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்தபோது இறந்து விட்டது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் விரைந்து சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com