கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
Published on

கறம்பக்குடி அருகே உள்ள தீத்தான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் தேவன். விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த விவசாய கிணற்றுக்குள் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது. இது குறித்து அவர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த மயில் வனப்பகுதியில் விடப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com