கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் சேவை

அவசர சிகிச்சைக்கு 91542 67794 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.

எழில்மிகு வடிவமைப்புடன் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதில் பயணிகளுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்ல கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணிகள் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு 91542 67794 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com