ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர் - சுற்றிவளைத்த போலீசார்.. - திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரமாண்ட மாநாடு நடந்தது.
ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர் - சுற்றிவளைத்த போலீசார்.. - திருச்சியில் பரபரப்பு!
Published on

திருச்சி,

திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர். அதன்படி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மாநாடு நடந்து கொண்டிருந்த போது மாநாட்டில் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி வந்துள்ளார். உடனே அவரை போலீசார் பிடித்து மேடைக்கு பின்புறம் அழைத்துச் சென்றனர். தகவலறிந்து மேடைக்கு பின்னால் தொண்டர்கள் பலர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பிடிபட்ட நபரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் மாநாட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com