வீட்டில் ஆயுதங்கள் பதுக்கியவர் கைது

நெல்லையில் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் ஆயுதங்கள் பதுக்கியவர் கைது
Published on

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் நயினார். இவரின் மகன் உடையார் (வயது 33). இவர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக நெல்லை சந்திப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் தலைமையிலான போலீசா உடையார் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசா உடையார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து அரிவாள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com