வெளிமாநில மது, சாராயம் விற்றவர் கைது

ஜோலார்பேட்டை அருகே வெளிமாநில மது, சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வெளிமாநில மது, சாராயம் விற்றவர் கைது
Published on

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை ஜங்ஷன் அருகே உள்ள புதுஓட்டல் தெருவில் வெளிமாநில பாக்கெட் மது மற்றும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதேப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 43) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 15 வெளி மாநில மது பாக்கெட்டுகள், 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com