மணப்பாறையில் ஸ்டூடியோவில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமராக்களை திருடியவர் கைது

மணப்பாறையில் ஸ்டூடியோவில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமராக்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மணப்பாறையில் ஸ்டூடியோவில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமராக்களை திருடியவர் கைது
Published on: 

மணப்பாறையில் ஸ்டூடியோவில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமராக்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருட்டு

மணப்பாறை திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே ஸ்டூடியோ நடத்தி வருபவர் சந்தோஷ் (வயது 25). கடந்த மாதம் 15-ந்தேதி இவரது ஸ்டூடியோவில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமராக்கள், லென்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டு போயின.

இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நொச்சிமேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கைது

அப்போது, அந்த வழியாக வந்த மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சந்திரா பாளையம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஸ்டூடியோவில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கேமராக்களை பறிமுதல் செய்தனர். கொள்ளைக்கு பயன்படுத்திய கடப்பாரை, முகத்தை மறைக்க பயன்படுத்திய தொப்பி, சாக்ஸ் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்படடது. கைது செய்யப்பட்ட காளிதாஸ் மீது 70 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com