

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் அதிமுக, கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
காஞ்சிபுரம் அதிமுகவின் கோட்டை, அண்ணா பிறந்த மண். அண்ணா பிறந்த மண்ணில் இருப்பது பாக்கியம்.
அண்ணாவின் கனவுகளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவாக்கினர்.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக எவ்வளவோ சோதனைகளை சந்தித்தது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசுகின்ற இடம் சட்டமன்றம். சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்போது திமுகவினர் செய்தது கொஞ்ச நஞ்சமா? அதிமுக ஆட்சிக்கு துரோகம் புரிந்து எட்டப்பனோடு எட்டப்பனாக எதிரிகளோடு பன்னீர் செல்வம் சேர்ந்தார்.
திமுகவினர் பல்வேறு பிரச்சினைகளை அதிமுகவிற்குள் ஏற்படுத்த பார்த்தனர். அதிமுகவில் தலைமைக்கு விஸ்வாசமாக இருந்தால் உயர் பதவி தேடி வரும்.
அதிமுக வலியுறுத்தியதால்தான் 28 மாதங்களுக்கு பிறகு உரிமைத்தொகை தந்தது திமுக அரசு. உதயநிதி அரசியல்ரீதியாக பேசினால் அதற்கு பதிலடி. தனி மனித தாக்குதல் நடத்தினால் 10 மடங்கு பதிலடி கொடுக்கப்படும்.
திமுகவுக்கு 5 ஆண்டு ஜால்ரா போட்ட கம்யூனிஸ்டுகளுக்கு இம்முறை ஒரு தொகுதி குறைவு.ஆளத்தெரியாதவர்கள் நாட்டை ஆண்டால் கடந்தான் ஏறும். கொரோனா காலத்தில் சிறந்த ஆட்சி தந்தது அதிமுக. கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.