பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தவர் கைது

கடையநல்லூர் அருகே பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தவர் கைது
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பகுதியில் அச்சன்புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் காசிதர்மம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் இசக்கிமுத்து (வயது 26) என்பதும், அரிவாள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் இருந்ததும், அந்த ஆயுதங்களை அருகில் உள்ள சோளக்காட்டில் பதுங்கி இருக்கும் சிலருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதும் தரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு இருந்து 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com