அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கீரனூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

பழனி அருகே கீரனூரில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, தனியார் வேலைவாய்ப்பு முகாம், கலைஞரின் வருமுன் காப்போம், மகப்பேறு உதவித்தொகை, கர்ப்பிணி பராமரிப்பு உதவித்தொகை உள்பட தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் தெடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றன.

அதேபோல் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் ஆகியேர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களும், வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்த புகைப்படங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com