அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி பெரம்பலூரில் நடைபெற்றது.
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேலூர் கிராம ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசின் திட்டங்களை வழங்கியதின் புகைப்படங்களுடன், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர், கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். அவர்களுக்கு அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com