அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி

அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கழுவந்தோண்டி ஊராட்சியில் அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com