மண்டபத்தில் கரை ஒதுங்கிய பாசி குவியல்

கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபம் கடற்கரை பகுதியில் பாசி குவியல் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
மண்டபத்தில் கரை ஒதுங்கிய பாசி குவியல்
Published on

பனைக்குளம், 

கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபம் கடற்கரை பகுதியில் பாசி குவியல் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

கடல் சீற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்கடலான மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மண்டபம் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சீனியப்பா தர்கா முதல் வேதாளை, மண்டபம் தோணித்துறை வரையிலான கடற்கரை பகுதியில் ஏராளமான பாசிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

கடல் பாசிகள்

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் இந்த வகை கடல் பாசிகள் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக கடல் நீரோட்ட வேகத்தில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அதுபோல் பாசிகளுடன் தாழை செடிகளும் கரை ஒதுங்கி கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com