பிளஸ்-1 மாணவியை தோட்டத்திற்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்: 8 பேர் கும்பல் வெறிச்செயல்

கோடை விடுமுறையையொட்டி தனது பாட்டி வீட்டிற்கு பிளஸ்-1 மாணவி சென்றுள்ளார்.
பிளஸ்-1 மாணவியை தோட்டத்திற்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்: 8 பேர் கும்பல் வெறிச்செயல்
Published on

திருவண்ணாமலை,

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கல்பட்டு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த மாணவியிடம் அதேபகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் மாணவியை மிரட்டி அருகில் உள்ள தோட்டத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு மாணவியை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்ட னர்.

இதில் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டுக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவியை உடனடி யாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் மாணவியின் உடல் நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு கூட்டு பாலி யல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் நேரடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்பட்டு கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த சிலரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியின் வீட்டுக்கு வந்த மாணவியை கடத்தி சென்று 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com