

அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி புலவன்பட்டியை சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டில் உள்ள கோழி கூண்டுக்குள் விஷப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து அவர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின்பு விஷப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.