பஸ் ஸ்டாண்டில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன்

சிதம்பரத்தில் பஸ் நிறுத்த நிழற்குடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்த கொண்டார் பாலிடெக்னிக் மாணவன்.
பஸ் ஸ்டாண்டில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன்
Published on

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிழற்குடையிலிருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவிகள், 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடையிலும் அங்கு அமர்ந்த படி தாலி கட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிதம்பரம் நகர பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com