எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு

நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு
Published on

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் என இருபிரிவுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி உள்ள இரும்பு தட்டிகளில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் 'கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்' என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் 'அடிமட்ட தொண்டனும் தலைமை பதவிக்கு வரலாம் என்ற நோக்கத்தில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கழக சட்ட விதிகளை மாற்றி ஜெயலலிதா வகித்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை பறிக்க துடிக்கும் பழனிசாமியை கண்டிக்கிறோம். கழக விதியை மாற்றி பழனிசாமியால் வழங்கப்படும் உறுப்பினர் அடையாள அட்டையை ஏற்க மாட்டோம், இவண்: திருநெல்வேலி மாநகர் மாவட்டம்' என்று அச்சிடப்பட்டு இருந்தது.

இந்த போஸ்டர்கள் நெல்லையில் அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com