தொடரும் மனிதநேயம்.. அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - அடுத்து நடந்த சம்பவம்..?

சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மூதாட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தொடரும் மனிதநேயம்.. அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - அடுத்து நடந்த சம்பவம்..?
Published on

கடலூர்,

திட்டக்குடியில் இருந்து கொத்தனூர் வழியாக அரசு பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக செயல்பட்ட ஓட்டுனர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி மூதாட்டி ஒருவரை பிரசவம் பார்க்க சொன்னார். அப்போது அந்த பேருந்திலேயே அப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மூதாட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com