தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். மாநிலங்கள் இல்லாமல், ஒன்றிய அரசு இல்லை. மாநிலங்கள் இல்லாமல், இந்தியா வளர முடியாது. ஒன்றிய அரசு எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்காக பாஜக சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. அரசியலமைப்பை பாதுகாக்கவே தற்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. மாநில சுயாட்சிக்காக கருணாநிதியும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும் நேரத்தில் நமக்கான உரிமை பறிபோகும். நீட்டை விட முக்கியமான தீரம்னம் தொகுதி மறுவறையறைக்கு எதிரான தீர்மானம். தொகுதி மறுவறையறைக்கு எதிராக முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அதனை வரவேற்கிறோம்.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுகவிற்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படும்போது தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்யாமல், மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அரசியல் ரீதியாக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இருந்து அதனை எதிர்க்க வேண்டும்.

Fair Demilitation Freeze Delimitation தற்போது முக்கியமானது. 50% உயர்ந்தால் நமக்கு பலன் கிடைக்கும் என பிரேமலதா கூறினார்; ஆனால் அது அப்படி கிடையாது. தொகுதிகளை 50% உயர்த்தினாலும் வட இந்திய ஆதிக்கம் உருவாகும் சூழல் ஏற்படும். அண்ணா அன்றே முழங்கினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று. மாநில நலனுக்காக கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். 5 முதல் 6 இந்தி பேசும் மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரை தேர்வு செய்யலாம் என்ற சூழல் உள்ளது; அது மாற்றப்பட வேண்டும்; தென் இந்தியாவில் இருந்து.., ஏன் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com