சோலார் பேனல் அமைக்க பனை மரங்களை வெட்டி சாய்த்த தனியார் நிறுவனம்...! தூத்துக்குடியில் பரபரப்பு

பேய்க்குளம் அருகே பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சோலார் பேனல் அமைக்க பனை மரங்களை வெட்டி சாய்த்த தனியார் நிறுவனம்...! தூத்துக்குடியில் பரபரப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் செல்லும் சாலையோரமுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களை வெட்டிட அரசு தடை விதித்துள்ள நிலையில் அதில் உள்ள பனை மரங்களை இன்று காலை தொழலாளிகள் வெட்டியுள்ளனர்.

இதனை பார்த்த பனைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குள்ளவர்கள் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில் இந்த இடத்தில் தனியார் சோலார் பேனல் அமைக்க இடம் வாங்கியுள்ளதாகவும், அவர்கள் பனை மரங்களை வெட்ட கூறியதன் பேரில் வெட்ட்பட்டது தெரியவந்தது.

இதில் மொத்தம் 24 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில், வெட்ட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என விசாரிக்க இடம் வாங்கிய தனியார் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com