அதிக வட்டி தருவதாக தனியார் நிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி

அதிக வட்டி தருவதாக தனியார் நிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதா ம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர்.
அதிக வட்டி தருவதாக தனியார் நிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி
Published on

சேத்துப்பட்டு தாலுகா மதுரைபெருமட்டூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தில் முகவர்கள் மூலமாக நீண்ட மற்றும் குறுகிய கால வைப்பு திட்டம், தொடர் வைப்பு திட்டம், மாதாந்திர வைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை தெரிவித்து வைப்புத் தொகைகளுக்கு குறுகிய காலத்தில் பல மடங்கு முதிர்வு தொகை கொடுப்பதாக இருந்தனர்.

உள்ளூர் நபர்கள் முகவர்களாக இருந்ததால் ரூ.200 முதல் ரூ.2000 வரை என மாதாந்திர வைப்பு திட்டத்தில் 60 மாதங்கள் பணம் செலுத்தினோம். மேலும் பலர் ஓரே தவணையாக பணத்தை செலுத்தி உள்ளனர். எங்கள் கிராமத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர். முதிர்வு தேதி முடிந்த பிறகு பணம் கொடுக்கவில்லை. முகவர்களாக செயல்பட்ட நபர்களும் உரிய பதில் அளிக்கவில்லை. நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள். எனவே எங்கள் பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com