வயலுக்குள் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது

திருவோணம் அருகே வயலுக்குள் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மாணவ- மாணவிகள் உயிர் தப்பினர்
வயலுக்குள் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது
Published on

ஒரத்தநாடு, செப்.21-

திருவோணம் அருகே வயலுக்குள் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மாணவ- மாணவிகள் உயிர் தப்பினர்

வயலுக்குள் வேன் கவிழ்ந்தது

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சொந்தமான வேனில் புறப்பட்டு அவர்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.இந்த வேனில் வாட்டாத்திக்கோட்டை கிராம பகுதியில் உள்ள மாணவர்கள் அதிகம் இருந்தனர். இந்த வேன் வாட்டாத்திக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.

மாணவர்கள் உயிர் தப்பினர்

திடீரென வயலுக்குள் வேன் கவிழ்ந்ததால் வேனில் இருந்த மாணவ- மாணவிகள் சத்தம் போட்டு அலறினர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேனுக்குள் சிக்கியிருந்த மாணவ -மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.இந்த விபத்தில் மாணவ -மாணவிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com