செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட செஸ் முன்னேற்ற கழகம் சார்பில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. போட்டியை மாவட்ட செயலாளர் பால்குமார் தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை மிதுல்பாலா, 2-ம் பரிசை அஸ்வந்த் மிக்கேல் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை சரண்யாஸ்ரீ, 2-ம் பரிசை மதுமிதா ஆகியோர் பெற்றனர்.

போட்டியில் நடுவராக சர்வதேச நடுவர் செல்வமணிகண்டன் செயல்பட்டார். நிகழ்ச்சியில் இணை செயலாளர்கள் முருகானந்த் மற்றும் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்த வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு மாநில செஸ் கழகம் நடத்தும் மாநில செஸ் போட்டிக்கு நெல்லை மாவட்டம் சார்பாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com