தேசிய கொடி ஏந்தி பா.ஜ.க.வினர் ஊர்வலம்

சுதந்திர தின விழா அமுதப்பெருவிழாவை முன்னிட்டு பா.ஜ.க.வினர் தசிய கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.
தேசிய கொடி ஏந்தி பா.ஜ.க.வினர் ஊர்வலம்
Published on

திருவண்ணாமலை

சுதந்திர தின விழா அமுதப்பெருவிழாவை முன்னிட்டு பா.ஜ.க.வினர் தசிய கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

நாட்டின் 75-வது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதை தொடர்ந்து திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. ஓ.பி.சி. அணி சார்பில் தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில ஓ.பி.சி. அணி துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் அருணை ஆனந்தன், சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நேரு, விஜயன், தர்மன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மாலதி வரவேற்றார். திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் தொடங்கிய ஊர்வலம் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம், கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு வழியாக சென்று காமராஜ் சிலையை சென்றடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் வந்தே மாதரம் என்று கோஷங்கள் எழுப்பிய படி சென்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஓ.பி.சி. அணி தலைவர் சாய்சுரேஷ், பொது செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com