அரசு பள்ளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் தொகுதியில் அரசு பள்ளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு பள்ளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள 6 பள்ளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பெஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை வகித்தார்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பெஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமார், நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புதாய், மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சை, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜ், அன்சாரி, மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் காளிராஜ், உதவி தலைமை ஆசிரியர் பூமாரி, உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தமிழ் ஆசிரியர் சங்கர் ராம், என்சிசி அலுவலர் பாலமுருகன், ஆசிரியர் ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமார், துணை தலைவர் குமார், உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மனோகரன், வேல்ராஜ் மற்றும் திமுகவைச் சேர்ந்த அஜய்மகேஷ்குமார், கணேஷ், ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், சங்கர், குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com