பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது. அது தொடர்ந்து அவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பழைய ஓய்வூதியத்தை பொறுத்தவரையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பல்வேறு கருத்துக்களை அந்தக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து வருகிறார். உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story






